News April 2, 2025
தமிழில் பெயர் பலகை கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அதிரடி

தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் உள்ள பெயர் பலகை கட்டாயம் தமிழில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். வரும் மே.15க்குள் இதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அவர் அபராதத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதை பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை கமென்டல சொல்லுங்க. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து இதனை தெரியப்படுத்துங்கள்.
Similar News
News April 10, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News April 10, 2025
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரை வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும்.விருப்பம் உடையவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 10, 2025
ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை <