News April 4, 2025
தமிழில் பெயர்ப்பலகை: ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். மே 15-க்குள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ்ப் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிவிப்பு வழங்கி அபராதம் விதிக்கப்படும். அபராதத்தைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
திண்டுக்கல்: சொந்த வீடு வேணுமா?

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News October 30, 2025
திண்டுக்கல்: தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

திண்டுக்கல் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 30, 2025
பழனி அருகே லாரி – பைக் மோதி ஒருவர் பலி

பழனியை அடுத்த மொல்லம்பட்டி பைபாஸ் அசோக் லைலாண்ட் ஷோரூம் அருகே இன்று விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனம் லாரி மோதியதில், இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பழனி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


