News October 24, 2024

தமிழரின் தொன்மை நாகரீகம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி

image

செங்கல்பட்டில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் 62 மாணவ, மாணவிகள் “சிறகை விரிக்கலாம் வாருங்கள்–100” என்ற நிகழ்ச்சியில், தமிழரின் தொன்மை நாகரீகம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழ்களையும், சார் ஆட்சியர் வெ.நாராயண சர்மா இன்று (24.10.2024) வழங்கி பாராட்டினார்.

Similar News

News October 29, 2025

செங்கல்பட்டு: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 29, 2025

செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொல்லை; டிரைவர் கைது

image

வண்டலுார் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியான பள்ளி மாணவி ஒருவர், பள்ளி வேனில் செல்வது வழக்கம். இவர் பள்ளி வேனை தவற விடும் போது, வழக்கமான ஆட்டோ ஒன்றில் பள்ளிக்குச் செல்வார். அவ்வாறு கடந்த ஏப்ரல் மாதம், மாணவி ஆட்டோவில் சென்ற போது, வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த சிதம்பரம், 42, ஆட்டோ டிரைவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவரை, போக்சோ வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

News October 29, 2025

செங்கல்பட்டு: மர்ம காய்ச்சல் 1 வயது குழந்தை பலி

image

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜசேகர்- சுகன்யா தம்பதி. இவர்களின் 1 வயது மகள் அனன்யாவிற்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. பெற்றோர் அருகில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கி கொடுத்தபோது, காய்ச்சல் சரியானது. திடீரென குழந்தைக்கு காய்ச்சல் அதிகரிக்கவே ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

error: Content is protected !!