News August 7, 2024
தமிழக ரயில்வே துறைக்கு ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு

பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய பொது செயலாளர் வேலூர் இப்ராஹிம் நேற்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, திமுக அரசு கனிம வளங்களை கொள்ளை அடித்து நாசம் செய்கிறார்கள், இந்திய கூட்டணியில் உள்ளவர்கள் மக்களை திசை திருப்பவே குறை கூறி வருகின்றனர். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரயில்வே துறையில் ரூ. 6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பேசினார்.
Similar News
News December 14, 2025
வேலூர் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வேலூர் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த நவ-4ல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்பபெற்று பதிவேற்ற பணியும் நடந்து முடிந்த நிலையிலும், இந்திய தேர்தல் ஆணையம் மேலும் 3 நாட்கள் நீடித்து இன்றோடு டிச-14 இப்பணிகள் நிறைவடை உள்ளது. மேலும், தங்களது SIR படிவத்தை BLO அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டது.
News December 14, 2025
வேலூர்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.
News December 14, 2025
வேலூர் ‘ரெட் ஜோன்’ ஆக அறிவிப்பு!

வேலூர் மாவட்டம், அரியூர் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் 17-ம் தேதி வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு, பொற்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, ‘ரெட் ஜோன்’ ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற டிச-17ஆம் தேதி ஸ்ரீபுரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


