News January 22, 2025

தமிழக முதல்வா் இன்று மதுரை வருகை!

image

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கல்லூரியில் புதன்கிழமை காலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், அங்கிருந்து காா் மூலமாக மதுரைக்கு வருகிறார் காமராஜா் சாலையில் உள்ள வா்த்தக சங்கப் பவள விழா காலை 10.30 மணியளவில் நடைபெறும் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் 100-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அவா் பங்கேற்றுப் பேசுகிறாா். பிற்பகல் 1.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

Similar News

News December 5, 2025

மதுரை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 5, 2025

மதுரையில் பரவும் வைரஸ் காய்ச்சல்… மக்களே உஷார்

image

மதுரை அரசு மருத்துவமனையில் 28 குழந்தைகள், 33 பெரியவர்கள் என மொத்தம் 61 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பிற்கு சேர்க்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 64 வயது ஆண், 30 வயது பெண் என இருவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இத்துடன் மதுரை புதூர் 13 வயது சிறுமி முதல் நிலை (ஹெச்1 என்1) பன்றி காய்ச்சல் பாதிப்பு, இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

News December 5, 2025

மதுரை: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.

error: Content is protected !!