News April 14, 2024
தமிழக காவல்துறையில் இளநிலை நிருபர்கள் வேலைவாய்ப்பு

தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்து பணியகத்தில் இளநிலை நிருபர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில் மொத்தம் 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மற்றும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
ரஞ்சி கோப்பையில் அசத்திய மாணவருக்கு பாராட்டு!

ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக விளையாடும் கோவை தனியார் கல்லூரி மாணவர் ஜி.அஜிதேஷ், அண்மையில் உத்தரபிரதேச அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 86 ரன்கள் எடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து இன்று (1.12.2025) கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் முதல்வர் அவரை பொன்னாடை போர்த்தி பாராட்டி, வாழ்த்தினார்.
News December 1, 2025
கோவையில் நடிகை சமந்தா திருமணம்!

நடிகை சமந்தா, தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து பெற்ற பின், பிரபல இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து இன்று கோவை ஈஷா யோகா மையத்தில் இரண்டாவது திருமணம் செய்தார். இந்த நிகழ்வு குடும்ப நண்பர்களை மட்டுமே அழைத்து மிக தனிப்பட்ட முறையில் நடைபெற்றுள்ளது. சமந்தா, ‘தி பேமிலி மேன் 2’ வெப்சீரிஸில் ராஜ் நிடிமொரு உடன் இணைந்து பணியாற்றிய போது அவர்களது காதல் மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 1, 2025
கோவை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


