News January 23, 2025
தமிழக கடற்கரையில் 33% கடல் அரிப்பால் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு சம்பந்தமாக தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. பின் செய்தியாளரிடம் பேசிய விஞ்ஞானி ராமநாதன், 1990ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை எங்கள் மையம் சார்பில் செயற்கைக்கோள் வரைபடம் மூலம் ஆய்வு செய்ததில் தமிழக கடற்கரையில் 33% கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
Similar News
News July 10, 2025
தூத்துக்குடி: இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த ரோந்துபணிகளை விளாத்திக்குளம் DSP அசோகன் மேற்கொள்கிறார். அவசர காலங்களில் பொதுமக்கள் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் எண்ணான 9514144100 ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News July 10, 2025
தூத்துக்குடி: குரூப் 4 தேர்வு: 37,005 பேர் எழுதுகின்றனர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நாளை மறுநாள் (ஜூலை 12) அன்று குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஏரல், எட்டையாபுரம் உள்ளிட்ட 10 வட்டங்களில் 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 37,005 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க 31 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
News July 10, 2025
தூத்துக்குடி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <