News January 23, 2025
தமிழக கடற்கரையில் 33% கடல் அரிப்பால் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு சம்பந்தமாக தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. பின் செய்தியாளரிடம் பேசிய விஞ்ஞானி ராமநாதன், 1990ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை எங்கள் மையம் சார்பில் செயற்கைக்கோள் வரைபடம் மூலம் ஆய்வு செய்ததில் தமிழக கடற்கரையில் 33% கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
Similar News
News September 19, 2025
தூத்துக்குடி: மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை உறுதி!

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக கருங்குளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நைனார் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், கீழப்பூவாணி, சிங்கத்தாகுறிச்சி, வடக்கு-தெற்கு காரசேரி, அனவரதநல்லூர், நாட்டார்குளம், கிளாக்குளம் ஆகிய பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர். இதில், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவாதம் அளித்தார். SHARE
News September 19, 2025
அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான, ஓராண்டு அர்ச்சகர்பயிற்சி பள்ளி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தினை www.tiruchendurmurugantemple.tnhrce.in இணையதளத்திலும், திருக்கோயில் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான சேர்க்கை இம்மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
தூத்துக்குடி: ரூ.25 லட்சம் தனி நபர் கடன்! APPLY NOW

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7-8% ஆகும். <