News August 2, 2024
தமிழக அளவில் முதல் இடம் பிடித்த மதுரை

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வருகிறது. இன்று தமிழகத்தின் நான்கு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை விமான நிலையத்தில் தமிழக அளவில் அதிகபட்சமாக 103 டிகிரி பாரன் ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
Similar News
News September 18, 2025
மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

மதுரையில் வளையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை,பாரபத்தி, சோளாங்கூரணி, நல்லூர்,குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வளையப்பட்டி, ம ஒ.ஆலங்குளம், கொம்பாடி, உசிலம்பட்டி, வாலாந்தூர், நாட்டார்மங்கலம், தும்மக்குண்டு, சேடப்பட்டி, காலப்பன்பட்டி, பூசலாபுரம், தங்கலாச்சேரி, அழகுரெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
மதுரை: செல்போன் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த செயலியில் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை <
News September 17, 2025
மதுரை – டெல்லிக்கு தினசரி விமான சேவை

மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே விமான சேவை இருந்து வந்தது. இந்நிலையில் தனியார் விமான நிறுவனம் டெல்லிக்கு தினசரி விமான சேவை அளிக்க உள்ளது அதன்படி தினமும் அதிகாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு அந்த விமானம் காலை 8:25 மணிக்கு மதுரை வந்தடையும், மறுமார்க்கமாக காலை 8:55 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:10 மணிக்கு டெல்லி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.