News August 8, 2024
தமிழக அரசு பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காஞ்சிபுரம், தருமபுரி உள்ளிட்ட இடங்களில் தனியாா் பேருந்து நிலையங்களை அமைக்க அனுமதி அளித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி, எந்த ஒரு தனி நபரும் தனியாா் பேருந்து நிலையங்களை உருவாக்க அனுமதி இல்லை என தர்மபுரியைச் சேர்ந்த அந்தோணிராஜ் வழக்குத் தொடர்ந்தார்.
Similar News
News December 13, 2025
காஞ்சிபுரம்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

காஞ்சிபுரம் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.(SHARE)
News December 13, 2025
காஞ்சிபுரம்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம்.(SHARE)
News December 13, 2025
காஞ்சிபுரம்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


