News September 14, 2024

தமிழகம் வந்த 19 மீனவர்கள்

image

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்கள், நேற்றிரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 19 மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி விசைப்படகுகளில், கடலில் மீன் பிடித்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News July 7, 2025

நாகையில் ஹவுஸ் வயரிங் இலவச பயிற்சி

image

நாகை புதிய கடற்கரை சாலை பகுதியில் உள்ள மத்திய அரசின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவசமாக ஹவுஸ் வயரிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. 30 நாட்கள் நடைபெறும் பயிற்சியில் நாகை மாவட்ட கிராமபுறத்தில் வசிக்கும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதுக்குட்பட்டவர் பங்கேற்கலாம். இப்பயிற்சியில் சேர 6374005365 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மைய இயக்குநர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

நாகை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்!

image

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய வட்டாட்சியர் எண்கள்.
▶வேதாரண்யம்-04369-250457,
▶திருக்குவளை-04365-245450,
▶கீழ்வேளூர்-04366-275493,
▶நாகப்பட்டினம்-04365-242456.
உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்.!

News July 6, 2025

நாகை: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை!

image

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்!

error: Content is protected !!