News September 14, 2024
தமிழகம் வந்த 19 மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்கள், நேற்றிரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 19 மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி விசைப்படகுகளில், கடலில் மீன் பிடித்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 27, 2025
நாகை: விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் வயல்கள் ஏதேனும் மழைநீரில் மூழ்கி இருந்தால், பயிர்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீர் வடிந்த பிறகு விவசாயிகள் ஏக்கருக்கு யூரியா, ஜிப்சத்துடன் கூடிய வேப்பம் புண்ணாக்கை வயலில் இடவேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல் தேவைப்படுவோர் அருகில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில், மாவட்ட அளவிலான கல்விக் கடன் முகாம், உயர்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை படிப்புகளுக்கான கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க மற்றும் கல்வி கடன் பற்றிய ஆலோசனைகளை பெற வரும் 27-ஆம் தேதி முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
நாகை இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள்

நாகை மாவட்டத்தில் நேற்று(நவ.26) இரவு 10 மணி முதல் இன்று(நவ.27) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது புகார்களை இதில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.


