News August 21, 2024
தமிழகத்தின் 4 இடங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பு மையம்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் குரங்கு அம்மை தொற்று நோய் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 இடங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு கூட குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை” என தெரிவித்தார்.
Similar News
News December 11, 2025
சென்னை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

சென்னை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<
News December 11, 2025
சென்னை: திரைப்பட பாணியில் பிரபல ரவுடி கைது!

சென்னை சூளைமேட்டில் 2024ல் நடந்த வழிப்பறி வழக்கில் ரவுடி பினுவை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த தேடப்பட்டு வந்த குற்றவாளி பினு, சூளைமேட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த 75 பேரை சுற்றி வளைத்து பினுவை, போலீசார் நேற்று (டிச.10) கைது செய்தனர்.
News December 11, 2025
சென்னையில் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு!

சென்னை மயிலாப்பூரில் பழமையான வீரக்கல், சதிக்கல் உள்ளிட்ட சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள தர்மராஜா கோவிலில், 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான மூன்று பலகைக்கல் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள், நாயக்கர் காலத்தில், வாழ்ந்தோரின் வாழ்வியலை விளக்குபவையாக உள்ளன.


