News August 7, 2024
தமிழகத்தின் முக்கிய ரயில் சேவையில் மாற்றம்

தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணி காரணமாக ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் சென்னை எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் (12631), சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661), சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633) ஆகிய ரயில்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 2, 2025
இன்று களைகட்டப்போகும் மெரினா!

சென்னை மெரினா கடற்கரையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தினங்களில் ஒவ்வொரு வாரமும் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (நவ.2) மாலை 5.00 மணிக்கு மயிலாட்டம், ஒயிலாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மெரினா போக நினைக்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 2, 2025
சென்னை: கணவன் கண்ணெதிரே மனைவிக்கு நேர்ந்த துயரம்!

அயனாவரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். மனைவி சுகனேஷ்வரி (54). இருவரும் நேற்றிரவு பைக்கில் சைதாப்பேட்டை சின்னமலை சிக்னலில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது சிக்னல் விழுந்ததும் அருகே நின்றிருந்த லாரியை டிரைவர் இயக்கியதில் பைக்கின் மீது உரசியது. இதில் நிலைதடுமாறி பைக் சாய்ந்ததில் சுகனேஷ்வரி சாலையில் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 2, 2025
சென்னை: LIC அருகில் உள்ள பழைய கட்டடம் பற்றி தெரியுமா?

சென்னை, அண்ணா சாலை LIC அருகில் இருக்கும் இடிந்த கட்டடத்தை நம்மில் பலரும் பார்த்ததுண்டு. அதன் வரலாறு உங்களுக்கு தெரியுமா? 1868ல் சென்னை வந்த மருத்துவர் W.E.ஸ்மித் இந்த இடத்தில் 1897ல் மருந்து விற்பனையகத்தை அமைத்தார். அதுதான் நாம் பார்க்கும் தற்போதைய கட்டடம். இவர் இதனை 1925ல் ஸ்பென்ஸருக்கு விற்றுவிட, 1934-ல் பாரத் இன்சூரன்ஸ் கம்பெனி இதனை வாங்கியது. பின், இந்த பில்டிங் 1957-ல் LIC வசம் வந்தது. ஷேர்!


