News February 17, 2025

தமிழகஅரசுக்கு பாலபிரஜாபதி அடிகளார் வேண்டுகோள்

image

அய்யா வைகுண்ட சுவாமியின் 193 வது அவதார தின விழாவுக்கு தமிழகம் முழுவதும் 4 மார்ச் 2025 அன்று மது கடைகளுக்கு விடுமுறை அளிக்க குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அய்யாவைகுண்ட சாமி அவதாரவிழாக்காக கன்னியாகுமரி, நெல்லை, துத்துகுடி தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையும் தமிழக அரசின் வரையருக்கபட்ட விடுமுறையும் அனுமதிக்கபட்டுள்ளது.

Similar News

News January 8, 2026

குமரி: கால்வாயில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

image

குளச்சல் AVM கால்வாயில் நேற்று மாலை துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அங்கு சோதனை செய்ததில் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்த போலீசார் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் அப்பகுதியில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரிய வந்துள்ளதாக கூறினர்.

News January 8, 2026

பொங்கல் பரிசுத்தொகுப்பு; தாலுகா அளவில் பறக்கும் படை அமைப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று முதல் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான புகார்கள் இருப்பின் அதனை மாவட்டம் நிர்வாகத்திற்கு தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தாலுகா அளவில் மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களுக்கும் பறக்கும் படை அமைக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 8, 2026

முக்கடல் சங்கமத்தில் பொங்கல் விழாவிற்கு அழைப்பு

image

சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி வரும் ஜன.14 அன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி முக்கடல் மைதானத்தில் ஜன.,15, 16 ஆகிய இரு நாட்கள் மாலை 5.30 முதல் 8.30 மணி வரை பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் சுமார் 100 கலைஞர்கள் பங்கேற்று பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள கலெகடர் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!