News March 27, 2024

தமாகா வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் மிதிவண்டியில் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஸ்ரீபெரும்புதுார் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்-27) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Similar News

News July 7, 2025

பொலம்பாக்கம் இளைஞர் விபத்தில் உயிரிழப்பு

image

செங்கல்பட்டு, பொலம்பாக்கத்தைச் சேர்ந்த கங்காதரன் (27), நேற்று மதுராந்தகம் நோக்கி பைக்கில் சென்றார். சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில், தனியார் மதுபான ஆலை அருகே, அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கங்காதரன் உயிரிழந்தார். மதுராந்தகம் போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News July 7, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (06/07/25) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள காவல் துறையினரின் நேரடி மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக இரவு நேரம் வேலைக்கு செல்லும் பெண்கள் இத்தகைய மொபைல் எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள் மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.

News July 6, 2025

செங்கல்பட்டு வானில் சர்வதேச விண்வெளி நிலையம்: நாசா தகவல்

image

சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் மணிக்கு 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி மையத்தை சில சமயங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 6 முதல் 10 வரை செங்கை மக்கள் இரவு 8 மணி முதல் 8.06 மணி வரை வானில் காண முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும். டக்குனு உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி பாக்க சொல்லுங்க

error: Content is protected !!