News March 27, 2024

தமாகா வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் மிதிவண்டியில் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஸ்ரீபெரும்புதுார் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்-27) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Similar News

News October 31, 2025

செங்கல்பட்டு: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

News October 31, 2025

தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல்…பரபரப்பு!

image

தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் இன்று மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. அப்போது அதிமுக கவுன்சிலர்கள் நாய், மாடு, பன்றி, கொசு வலை போன்ற பொம்மைகளோடு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

News October 31, 2025

பனையூர் தவெக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (அக். 30) நள்ளிரவு சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது. மேலும், மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!