News December 31, 2024
தபால் நிலைய ஊழியர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு

கரூர் மாவட்டத்தில் 100 நாட்கள் காசநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் கரூர் தலைமை தபால் நிலைய ஊழியர்களுக்கு காசநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பது குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Similar News
News October 14, 2025
கரூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (24.10.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Production Assistant பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <
News October 14, 2025
கரூர்: நடந்து சென்றவர் மீது பைக் மோதி பலி!

விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (45). இவர் கரூர் மாவட்டம் பவித்திரம் முருகன் நகர் சாலையில் நேற்று நடந்து சென்ற போது அவ்வழியே நவீன் என்பவர் ஓட்டி வந்த கேடிஎம் பைக் மோதியதில், ரங்கநாதன் பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்தார். ரங்கநாதன் உறவினர் சந்திரன் புகாரில் க.பரமத்தி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.