News August 15, 2024
தபால் நிலையங்களில் 4052 தேசியக்கொடிகள் விற்பனை

பாரத தேசத்தின் 78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை விறுவிறுப்பாக கடந்த 10 நாட்களாக நடந்தது. இந்த ஆண்டு நேரில் மற்றும் இணைய தளங்கள் வாயிலாக குமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலங்கங்கள் மூலம் 4052 தேசிய கொடிகள் விற்பனையானதாக குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.
Similar News
News October 30, 2025
குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 01.11.2025 காலை 11.00 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(அக்.30) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற இருந்தது. இதில் ஆட்சியர் தேர்தல் ஆணைய காணொளி காட்சியில் கலந்து கொள்ள இருப்பதால் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.