News April 16, 2025
தபால் நிலையங்களில் 1.79 லட்சம் பேர் ஆதார் திருத்தம்

கன்னியாகுமரி மாவட்டம் தபால் நிலையங்கள் மூலம் ஆதார் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது .மேலும் சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், குமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவைகளை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 336 பேர் பெற்று பயனடைந்துள்ளதாக தபால் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர் பாஸ்போர்ட் சேவையினை 18,484 பேர் பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.
Similar News
News December 23, 2025
குமரி: இனி EB ஆபீஸ்க்கு அலைய தேவையில்லை!

குமரி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <
News December 23, 2025
குமரி: தவெக நிர்வாகி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

களியக்காவிளை சந்தை பகுதியை சேர்ந்தவர் ஷெரின் (25). தவெக களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகியான இவர் நேற்று குழித்துறை ரயில்வே தடம் வழியாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 23, 2025
குமரி: மனைவிகள் பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

சிதறால் பகுதி கட்டிட தொழிலாளி விபின்(29). திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவி அவரை விட்டு பிரிந்தார். 2வதாக சேலத்தை சேர்ந்த பெண்ணை ஊருக்கு அழைத்து வந்து கோவிலில் வைத்து திருமணம் செய்தார். அந்த பெண்ணின் பெற்றோர் போலீசில்புகார் கொடுத்து விபினிடமிருந்து அவரை பிரித்து அழைத்துச்சென்றனர். இதனால் மனமுடைந்த விபின் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருமனை போலீசார் விசாரணை.


