News February 18, 2025
தபால் நிலையங்களில் புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அனைத்து தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆதார் அட்டை புதுப்பித்தல் போன்ற சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை தற்போது நெல்லையிலும் உள்ளது. தகுதியானவர்கள் அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
Similar News
News December 1, 2025
நெல்லையில் வாழை இலைகள் இமாலய விலை ஏற்றம்

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் வாழைத்தார்கள் மற்றும் வாழை இலைகள் வரத்து குறைந்தது. மேலும் இன்று (டிச.1) சுபமுகூர்த்த தினம் என்பதால் ரூ.400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழை இலைகள், இமாலய விலை ஏற்றமடைந்து இன்று சந்தைகளில் ரூ.3500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
News December 1, 2025
நெல்லை – நவகைலாயங்களுக்கு சிறப்பு பேருந்து சேவை

மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு நெல்லை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வருகிற 21, 28 மற்றும் ஜனவரி 4, 11 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நவகைலாயங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன காலை 6.30 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு பஸ் சேவைக்கு இன்று முதல் வருகிற ஜனவரி 10ம் தேதி வரை முன்பதிவு வசதி உள்ளது. பயண கட்டணம் ஒருவருக்கு 600 ரூபாய் ஆகும். ஷேர் பண்ணுங்க.
News December 1, 2025
நெல்லை: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

நெல்லை மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <


