News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருச்சியில் மட்டும் 61 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 18, 2025

திருச்சி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

திருச்சி மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!

News December 18, 2025

திருச்சி: புத்தக பதிப்பாளர்களுக்கு அழைப்பு

image

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைய உள்ள காமராஜர் நூலகத்திற்கு புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை நூலகத் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 26-ம் தேதிக்குள் அதே இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என பொது நூலக இயக்குனர் ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News December 18, 2025

திருச்சி: சிறப்பு குறைதீர் முகாம் அறிவிப்பு

image

திருச்சி மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம், திருச்சி தலைமை தபால் நிலையத்தில் வரும் ஜன.8-ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை பிரதீப்குமார், உதவி இயக்குனர் (காப்பீடு மற்றும் புகார்), அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி -01 என்ற முகவரிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும் என மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!