News September 14, 2024

தபால் அலுவலகங்களில் நாளை ஆதார் சேவை மையம்

image

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நாளை 15ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். அரசு அறிவுறுத்தலின்படி 10 ஆண்டுகள் நிறைவுற்ற ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொள்ளவும், பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் ஆதார் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், பொதுமக்கள் இந்த சிறப்பு ஏற்பாட்டை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

Similar News

News January 10, 2026

தூத்துக்குடியில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

தூத்துக்குடியில் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தூத்துக்குடி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0461-2335111
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.மதுரை உயர் நீதிமன்றம்: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 10, 2026

தூத்துக்குடி: இளம் பெண் மீது சரமாரி தாக்குதல்

image

தூத்துக்குடி மந்தி தோப்பு துரைசிங்க நகரை சேர்ந்தவர் சரண்யா (25). இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஆறுமுகம் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆறுமுகம், சரண்யாவை அவதூறாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் ஆறுமுகத்தை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

தூத்துக்குடி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த சில நிமிடங்களில் தங்கள் இடத்திற்கு லைன்மேன் வந்து புகாரை சரி செய்வார். SHARE பண்ணுங்க

error: Content is protected !!