News April 9, 2025
தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈக்காடு அருகே உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் ‘டான்செம்’ வாயிலாக வாரும் 19ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழக தொழில் வளர்ச்சி கழகத்தின் ‘டான்செம்’ நிறுவனம், வேலைவாய்ப்பு பயிற்சி வழங்குகிறது. ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், செவிலியர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டதாரிகள் பங்கேற்கலாம். உள்நாடு, வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 10, 2025
ஆரப்பாக்கம் பகுதியில் நாளை மின்தடை

திருவள்ளூர் மாவட்டம் ஏலவூர் மற்றும் ஆரம்பாக்கம் பகுதியில் மின் பராமாரிப்பு பணிக்காக நாளை டிச. 10 புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு இதனால் பெத்திக்குப்பம் மகாலிங்க நகர் தூரப்பள்ளம் ஆரம்பாக்கம் ஊராட்சி எகுமதுரை ஊராட்சி பூவாலை ஊராட்சி தேக்கம்பூர் ஊராட்சி ஏலவூர் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
News December 10, 2025
திருவள்ளூர்: கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை

மல்லியங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜோதீஷ்(26). இவரது மனைவி புவனேஸ்வரி(21) கர்ப்பமான நிலையில், கும்மிடிப்பூண்டி தனியார் மருத்துவமனையில் கடந்த 8ஆம் தேதி சென்னை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை மூளை வளர்ச்சி இல்லாமல் பலவீனமாக குழந்தை பிறந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தவறான சிகிச்சை புகாரின் அடிப்படையில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
News December 10, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


