News March 5, 2025

தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

image

பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் வரும் 22.03.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார். முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் டிகிரி கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். <>இந்த <<>> இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம்.SHARE IT

Similar News

News December 3, 2025

நெல்லை: 2.33 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

image

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 2.33 லட்சத்து 464 வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கணக்கீட்டின்படி தெரியவந்துள்ளது. இறந்தவர்கள், கண்டுபிடிக்க இயலாதவர்கள், இரட்டை பதிவு ஆகிய பிரிவுகளில் இவர்கள் அடங்குவர். கலெக்டர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.

News December 3, 2025

நெல்லை: 5 உர விற்பனை நிலையங்களுக்கு தடை

image

வேளாண்மை அதிகாரிகள் களக்காடு வட்டாரத்தில் உர விற்பனை நிலையங்களில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உர கட்டுப்பாட்டு ஆணை விதிகளை மீறிய 5 உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர். பதிவேடு சரியாக பராமரிப்புக்காமல் இருத்தல், உரிய பாரம் இணைக்காமல் உரம் விற்பனை செய்தல் போன்ற விதி மீறல்கள் கண்டறியப்பட்டன என இணை இயக்குனர் பூவண்ணன் தெரிவித்துள்ளார்.

News December 3, 2025

11.82 லட்சம் வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று வரை, 14,17,655 வாக்காளர்களுக்கு (சுமார் 99.96 சதவீதம்) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. 11,82,927 கணக்கீட்டு படிவங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவாக பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விண்ணப்ப படிவங்கள் வழங்காத வாக்காளர்கள் விரைவில் வழங்க வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்தார்.

error: Content is protected !!