News April 21, 2025

தனியார் பஸ்-வேன் மோதல்; வேன் டிரைவர் பலி

image

மதுரையில் இருந்து தேனிக்கு தனியார் பஸ் சென்றது. நேற்று மதியம் ஆண்டிப்பட்டி அருகே SSபுரம் சென்றபோது சிமென்ட் மூடைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் மீது பஸ் மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கி பஸ்சின் அடிப் பகுதியில் சிக்கியது.இடிபாடுகளுக்குள் சிக்கிய வேன் டிரைவர் ஆண்டிபட்டி சீனிவாசா நகரை சேர்ந்த முத்துலிங்கம் 45, சம்பவ இடத்திலேயே பலியானார்.10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News December 2, 2025

தேனி: அரசுக்கு கோரிக்கை வைத்த முன்னாள் முதல்வர்

image

பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார். மேலும் விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து கால அவகாசத்தை டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 2, 2025

தேனி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்க வழி இருக்கு. இந்<>த ஆதார்<<>> செயலியை பதிவிறக்கம் செய்து ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண்ணை மாற்றம் செய்து கொள்ளலாம். உங்க குடும்பத்தினரின் உள்ள ஆதார் மாற்றங்களை செய்து கொள்ளலாம். இந்த செயலி இருந்தா ஆதார் கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. SHARE பண்ணுங்க!

News December 2, 2025

தேனி: மழை நீரில் மின்கசிவு; முதியவர் உயிரிழப்பு.!

image

போடியை சேர்ந்தவர் ராமையா (60). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற கோமாதா பூஜைக்காக தனது பசுமாடுகளை அழைத்துச் சென்றாா். அப்போது பசுமாடுகள் மிரண்டு ஓடின. மாடுகளைப் பிடிக்க முயன்றபோது ராமையா தவறி விழுந்தாா். இதில் மழைநீரில் மின்சாரம் கசிந்திருந்ததால் ராமையா மீது பாய்ந்தது. மயக்கமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். போடி போலீசார் வழக்கு பதிவு.

error: Content is protected !!