News April 1, 2025

தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

image

ஏரியூர் மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, நரசிமேடு பகுதியில், மாணவர் சேர்க்கைக்காக சென்றுகொண்டிருந்த தனியார் பள்ளி வேன் கவிழ்த்து விபத்து ஏற்பட்டது. இதில் மாணவர் சேர்க்கைக்காக சென்றதால் வாகனத்தில் பள்ளி குழந்தைகள் இல்லை. உள்ளே சில ஆசிரியர்கள் மட்டும் இருந்துள்ளனர், காயமடைந்த ஆசியர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள பென்னாகரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News April 5, 2025

வாடிக்கையாளர் உறவு அதிகாரி வேலைவாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஹரி லீடிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர் உறவு அதிகாரி பணிக்கு ஆட்கள் தேர்வு .இந்த வேலைக்கு 20-30 வயதுக்குட்பட்டவர்கள் 12ஆம் வகுப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 – ரூ.25,000 வழங்கப்படும். உணவு, போக்குவரத்து ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News April 5, 2025

தர்மபுரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்திற்கு இன்று கனமழையும் மற்றும் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 4, 2025

ரூ.1 கோடி லஞ்சம் ; காவல் ஆய்வாளர் கைது

image

ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கிய புகாரில் தர்மபுரியை சேர்ந்த காவல் ஆய்வாளர் நெப்போலியன் கைது செய்யப்பட்டார். நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் என்பவர் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனிப்படையினர் நெப்போலியனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

error: Content is protected !!