News April 19, 2025

தனியார் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

தஞ்சை அருகே திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Agri Research Analyst பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்…

Similar News

News December 2, 2025

தஞ்சை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 2, 2025

தஞ்சை: இடிந்தது விழுந்த பள்ளியின் சுவர்!

image

தஞ்சையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடு கட்டிடம் உள்ளிட்டவை இடிபாடுகளில் சிக்கி உள்ளன. இந்நிலையில் நேற்று (டிச. 01) தஞ்சாவூர் பிளாக் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பள்ளி மாணவர்களும், சாலையில் நடந்து செல்வோரும் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து இதனை சரி செய்யும் பணிகளை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டது.

News December 2, 2025

தஞ்சை: மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் தோழகிரிப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் நேற்று (டிச.01) குருங்குளம் மேற்கு ஊராட்சி அற்புதபுரம் கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி வேலை செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். விரைந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!