News April 15, 2024
தனியார் தோட்டத்தில் 1145 மது பாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தச்சமொழி பகுதியில் உள்ள தோட்டத்தில் அதிக அளவில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அங்கு சென்ற காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் அங்கு நடத்திய சோதனையில் 1145 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் செல்வகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.
Similar News
News December 23, 2025
தூத்துக்குடி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 23, 2025
தூத்துக்குடி தவெக மாவட்ட செயலரை அறிவித்த விஜய்

கோஷ்டி பூசலால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எந்த தொகுதிகளுக்குமே தவெக மா.செக்களை அறிவிக்காமல் இருந்தது. இன்று பனையூர் அலுவலகத்தில் மா.செக்களை தவெக தலைவர் விஜய் அறிவித்தார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட செயலர் நியமனம் குறித்து அதன் நிர்வாகி அஜிதா ஆக்னல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலராக சாமுவேலை நியமனம் செய்து விஜய் அறிவித்துள்ளார்.
News December 23, 2025
தூத்துக்குடி: இனி உங்க PAN கார்டு செல்லாது?

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <


