News September 28, 2024
தனியார் கல்லூரி பெண் முதல்வர் மீது தாக்குதல்

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. முதல்வராக இஷபெலியா ராஜகுமாரி உள்ளார். கல்லூரியில் இருந்தபோது ஒரு மர்ம நபர் பெட்ரோல் பாட்டில் மற்றும் கத்தியுடன் அத்துமீறி உள்ளே புகுந்து அறைக்கு சென்று தகராறில் ஈடுபட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் முதல்வரை மிரட்டி கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். முதல்வரை தாக்கியவர் கிராபட்டியை சேர்ந்த லாலி கிளிண்டன் என்பது தெரியவந்தது.
Similar News
News December 4, 2025
திருச்சி மாவட்டத்திற்கு பெருமை: உலகளவில் சாதனை!

உலக அளவிலான பளு தூக்கும் போட்டி கடந்த வாரம் தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட 16 பேரில், மணப்பாறை கல்பாளையத்தான் பட்டியை சேர்ந்த டிக்சன் ராஜ் மற்றும் கே.பெரியப்பட்டியை சேர்ந்த திலீப் ஆகிய இருவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இதனையடுத்து வெற்றி கோப்பைகளுடன் நேற்று இரவு ஊர் திரும்பிய வீரர்களுக்கு பொதுமக்கள், உறவினர்கள் உற்சாக வரவேற்ப்படித்தனர்.
News December 4, 2025
திருச்சி: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ரயிலில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான ஒரு அறிவிப்பை திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், “ரயிலில் கற்பூரம் ஏற்றுதல் அல்லது எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பான அமைதியான யாத்திரைக்காக ஒத்துழையுங்கள். உங்கள் ஒத்துழைப்பே அனைத்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 4, 2025
திருச்சி: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

திருச்சி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <


