News January 22, 2025
தனியார் இ-சேவை மையத்தில் திடீர் விசாரணை

பனப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தனியார் அரசு இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த இ-சேவை மையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். அப்போது இ-சேவை மையத்தில் விண்ணப்பதாரர்களிடம் ஒவ்வொரு மனுவுக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.
Similar News
News November 21, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் காவல்துறை விவரம் வெளியீடு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ-21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
ராணிப்பேட்டை: சாம்சங் நிறுவனம் புதிய கல்வி திட்டம்!

ராணிப்பேட்டை (ம) காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 10 அரசு பள்ளிகளில் சாம்சங் நிறுவனம் தங்களது சமூகப் பொறுப்பில் இதிலிருந்து “DigiArivu Empowering Students Through Tech” என்ற திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்ய உள்ளனர். இதற்கான புத்துணவு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார்.
News November 21, 2025
தேசிய தன்னார்வ ரத்த தான தினம்: ஆட்சியர் கௌரவிப்பு!

தேசிய தன்னார்வ ரத்த தான தினம் இன்று (நவ.21)ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக முறை ரத்ததானம் செய்தவர்கள் மற்றும் அதற்கான ஏற்பாடு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அதிக முறை ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


