News April 14, 2024
தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அம்பேத்கர்

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அண்ணல் அம்பேத்கார் பிறப்பால் ஒருவன் தாழ்ந்தவன் இல்லை என்ற உயர்ந்த நீதியை நிலை நாட்ட தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் எனத் தெரிவித்தார். மேலும், அவரை போன்ற மகத்தான தலைவர் அரசியல் சாசனத்தையே இந்த தேசத்திற்காக உருவாக்கி தந்தபோது எதிலும் அவர் தலைக்கனம் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
Similar News
News November 17, 2025
புதுவையில் 354 அரசு பணியிடங்கள் அறிவிப்பு

புதுவையில் காலியாக உள்ள 354 அரசு பணியிடங்களுக்கு நாளை (நவ.18) மதியம் 12 மணி முதல் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 14-ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். புதுச்சேரியில் முதல் முறையாக இந்த அரசு பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த போட்டி தேர்வுக்கு நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 17, 2025
புதுவை: ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து திருட்டு

கிருமாம்பாக்கம் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் அன்பரசன். காட்டுக்குப்பம் மெயின் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இந்த கடையில் ஷட்டரில் உள்ள 2 பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 3 கேமராக்கள், 5 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டுள்ளதாக அன்பரசன் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று வழக்குப் பதிந்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
News November 17, 2025
புதுச்சேரி: இன்று விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (17/11/25) புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.


