News February 16, 2025
தந்தை கொலையில் 12 வயது மகனும் கைது

தென்காசி மாவட்டம் நொச்சிகுளத்தை சேர்ந்த முத்துக்குமார் கடந்த 5ம் தேதி மஞ்சள் காமாலை நோயால் இறந்ததாக மனைவி கூறினார். இந்த நிலையில் முத்துக்குமாரின் பிரேத பரிசோதனையில் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாக அறிக்கை வந்தது. அவரது மனைவி மரியா ஆரோக்கிய செல்விடம் விசாரித்த போது கணவனை கழுத்து நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த நிலையில் நேற்று 12 வயது அவரதுமகனையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 17, 2025
தென்காசி: நிலம் வாங்க ரூ.5 லட்சம்..!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது தென்காசி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க
News December 17, 2025
தென்காசி: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

தென்காசி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. <
News December 17, 2025
தென்காசி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் காளிராஜா (29). தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் செங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது தனியாக இருந்த காளிராஜ் வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த வாசுதேவநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


