News March 25, 2025
தந்தை இறங்கிய நேரத்தில் குழந்தையுடன் சென்ற பேருந்து

மயிலாடுதுறையில் இருந்து பந்தநல்லூர் சென்ற அரசு பஸ்சில் ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை தனியாக அமர்ந்திருந்தது. இதை கவனித்த பயணிகள் ஓட்டுநரிடம் தெரிவித்தனர். விசாரித்ததில் பஸ்சில் இடம் பிடிக்க குழந்தையுடன் ஏறிய தந்தை, குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது பஸ் புறப்பட்டு சென்றது. இதையடுத்து போலீசார், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News November 10, 2025
மயிலாடுதுறை: 328 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் இன்று (நவ.10) நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 328 மனுக்கள் பெறப்பட்டன. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆட்சியர், ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
News November 10, 2025
மயிலாடுதுறை மக்களே! உடனடி தீர்வு வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<
News November 10, 2025
மயிலாடுதுறை: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


