News March 25, 2025
தத்தகிரி முருகன் கோயில் பற்றி தெரியுமா?

நாமக்கல் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள கிராமமான முத்துகாபட்டி கிராமத்திற்கு அருகில் வழியிலேயே அமைந்துள்ள கோவில் தத்தகிரி முருகன் கோவில். இந்த கோவில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. புகழ் பெற்ற முருக பக்தரான கிருபானந்த வாரியார் இந்த கோவிலில் அமைதி மற்றும் சாந்தம் பெறுவதற்காக அடிக்கடி வந்து சென்றதாக சொல்லப்படுகிறது. ஷேர் செய்யவும்.
Similar News
News December 17, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.17) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138), வேலூர் – (தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (மணிகண்டன் – 9498169221) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 17, 2025
முட்டை கொள்முதல் விலை ரூ. 6.25- ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.25- காசுகளாக விற்பனை ஆகி வருகின்றது. இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.25-ஆக நீடிக்கின்றது. தொடர்ந்து உயர்ந்து வந்த முட்டை கொள்முதல் விலை கடந்த இரண்டு நாட்களாக எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் நீடிக்கின்றது.
News December 17, 2025
JUST IN: எருமப்பட்டி அருகே கார் மோதி பலி

ஈரோட்டை சேர்ந்த சிவா (25), மனைவி மற்றும் 3 வயது மகளுடன் நேற்று அவர் தனது பைக்கில் மாமனார் வீட்டிற்கு சென்றார். பின்னர் மகளை அழைத்து எருமப்பட்டி அருகே வந்த பொது எதிரே வந்த கார், பைக் மீது மோதியதில் சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகளை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல்லில் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


