News April 21, 2024

தண்ணீர் தொட்டியில் குளித்த மாணவன் உயிரிழப்பு

image

கரூர் தோரணக்கல்பட்டி நேரு நகரைச் சேர்ந்த மனோகரன் மகன் மிதுன்(17), அரசு ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் கே.எம்.புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் குளித்தபோது, இரும்பு குழாயில் மோதி தலையில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து தாந்தோணிமலை போலீஸார் விசாரிக்கின்றனர்

Similar News

News April 30, 2025

கரூர் அருகே அடுத்தடுத்த கொள்ளை முயற்சி

image

கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ்( 34). இவருக்கு சொந்தமான ஆவரங்காட்டு புதூரில் உள்ள பண்ணை வீட்டின் கதவை மர்மநபர்கள் உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள ஜெயக்குமார் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றுள்ளனர். இது குறித்த வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 29, 2025

குழந்தை வரம் தரும் நரசிம்மபுரீஸ்வரர் கோயில்!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள கருப்பத்தூரின் நரசிம்மபுரீஸ்வரர் கோயிலில் ஓர் சிறப்பு வழிபாடு உண்டு. இங்குள்ள மகாலட்சுமிக்கு பூசுமஞ்சளை பக்தர்கள் சாத்துவது வழக்கம். அந்த மஞ்சளை பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அவர்கள் அதை அரைத்து குளித்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்கிறார்கள் பக்தர்கள். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 29, 2025

கரூர் அரசு உதவித் திட்ட எண்கள்

image

▶️ உதவி திட்ட இயக்குநர்: 7373704218
▶️ செயற்பொறியாளர்: 7373704578
▶️ உதவித் திட்ட அலுவலர்(ஊதியம்&வேலைவாய்ப்பு) : 7402607682
▶️ உதவித் திட்ட அலுவலர்(வீடுகள்&சுகாதாரம்): 7402607681
▶️ உதவித் திட்ட அலுவலர்: 7402607679
▶️ கண்காணிப்பாளர்: 7402607688
▶️ வட்டார வளர்ச்சி அலுவலர்: 7402607715

error: Content is protected !!