News April 13, 2025
தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் குமரேசன் வயது (16). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று (ஏப்ரல்.12) மாலை, நகரி திண்டிவனம் ரயில் பாதைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News April 16, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்
News April 16, 2025
திருவள்ளுவரில் மீன் பிடி தடைக் காலம் அமலுக்கு வந்தது

தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜீன்14 வரை 61நாட்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு மீன்பிடி தடை செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் முதல் குமரி வரை உள்ள 16 கடலோர மாவட்டங்களில் உள்ள இந்த தடை அமலுக்கு வந்தது. இதனையொட்டி இந்த காலத்தில் தமிழக அரசு தரும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
News April 16, 2025
இரட்டை கொலையாளிக்கு ஆயுள் தண்டனை

ஆவடி அடுத்த விளிஞ்சியம்பாக்கத்தில் பண்ணை வீட்டில் ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களான ஜெகதீசன், விசாலினி தம்பதியர் வசித்து வந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி பூவலட்சுமி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பூவலட்சுமி சிறையில் இறந்த நிலையில், சுரேஷிற்கு பூந்தமல்லி நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது.