News April 15, 2025
தண்டவாளத்தில் உடற்பயிற்சி இரும்பு மனிதன் கைது

நாகர்கோவில் அருகே தாமரைக் குட்டி விளையை சேர்ந்தவர் கண்ணன். இவர் இரும்பு மனிதன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தனது நண்பருடன் உடற்பயிற்சி மேற்கொண்ட சமூக வலைதளங்களில் இது பரவியது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் இன்று (ஏப்.15) கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
Similar News
News November 20, 2025
குமரியில் 860 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் போக்குவரத்து விதி மீறல்களுக்காக ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக 860 பேரும் இது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து போலீசார் நேற்று தெரிவித்தனர்.
News November 20, 2025
குமரி: வேலைதேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (நவ 21) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் மூலம் நடத்தப்படும் இம்முகாமில் வேலை தேடும் இளைஞர்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 20, 2025
குமரி: கடிதம் எழுதிவைத்துவிட்டு முதியவர் தற்கொலை

ஆசாரிப்பள்ளம் சந்தனராஜ் (67) 32 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் கட்டிட கான்ட்ராக்டராக வேலை பார்த்து, சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார். கடந்த 17ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ரோஸ் நகர் கொட்டகையில் நவ 18ம்தேதி தூக்கிட்டு இறந்த நிலையில் அவரது உடலை ஆசாரிபள்ளம் போலீசார் மீட்டனர். சொத்து, மன ரீதியான பிரச்சினை தொடர்பாக தற்கொலை செய்வதாக அவர் எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர்.


