News November 24, 2024
தடையை மீறி தீபம் ஏற்றியவர்களுக்கு ஜாமின்

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தடையை மீறி கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றியதாக கடந்த வாரம் இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர் திருப்பரங்குன்றம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான 8 பேரும் ஜாமினில் இன்று வெளிவந்தனர். அவர்களுக்கு பாஜகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
Similar News
News August 11, 2025
மதுரையில் டிரெக்கிங் செல்ல BEST PLACE

வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அருவியின் தடாகை பாதையில் மீண்டும் மலையேற்றம் துவங்கியுள்ளது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வனத்துறை அலுவலர்கள் உதவியோடு மலையேற்றம் நடைபெறும். 6வயதிற்கு மேற்பட்டோர் மலையேற்றம் புரியலாம். விரும்புவோர் தமிழக வனத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட இந்த<
News August 10, 2025
கல்குவாரியில் மூழ்கி சிறுவர் – சிறுமி உயிரிழப்பு..!

மதுரை பாண்டியன் கோட்டை கல்மேடு குவாரி பகுதியில் நரிமேட்டைச் சேர்ந்த 9 வயது சிறுமி சையது அலி சஹானா மற்றும் இவரது சித்தப்பா மகனான 3 வயது சிறுவன் ஆஷிக் ராஜா ஆகிய இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் மற்றும் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News August 10, 2025
மதுரை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

மதுரை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.