News May 7, 2025
தடைகள் வராமல் இருக்க இங்க போங்க

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
Similar News
News July 11, 2025
மயிலாடுதுறையில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் இன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலை தேடும் இளைஞர்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)
News July 11, 2025
மயிலாடுதுறை: நாளை உழவரை தேடி வேளாண் முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம் மயிலாடுதுறை வட்டாரத்தில் உள்ள குளிச்சார் மற்றும் சோழம்பேட்டை கிராமங்களில் நாளை 11.7.2025 நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என மயிலாடுதுறை வேளாண் இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.
News July 10, 2025
சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்( 2/1)

E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E- பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW