News May 7, 2025
தடைகள் வராமல் இருக்க இங்க போங்க

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழி.பட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
Similar News
News July 5, 2025
நாகப்பட்டினம்: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் நாகை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!
News July 5, 2025
நாகையில் சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி..!

நாகை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் (அ) அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு இந்த <
News July 5, 2025
நாகை புதிய கடற்கரையில் இன்று மாலை திரைப்படம் திரையிடல்

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ஜூலை 5 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதில் எல்லோரும் வந்து கலந்து கொண்டு திரைப்படத்தை கண்டு களித்து செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதனை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு ஆகாஷ் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.