News May 7, 2025

தடைகள் வராமல் இருக்க இங்க போங்க

image

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

Similar News

News November 15, 2025

மயிலாடுதுறை: காவல்துறை எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் தங்களுக்கு பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக வரும் போலியான குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இதன் மூலம் உங்களது பணத்தை இழக்க நேரிடலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும் பொருட்டு, மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News November 15, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், (நவ.14) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

மயிலாடுதுறையில் சாராயம் கடத்திய நபர் கைது

image

மயிலாடுதுறை அருகே மாப்படுகை பகுதியில் மதுவிலக்கு காவல்துறையினர் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் இருந்து, ஜான் பீட்டர் மற்றும் லூகாஸ் ஆகியோர் பாண்டி சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதில் ஜான் பீட்டரை கைது செய்து அவரிடமிருந்து 500 எண்ணிக்கையிலான பாண்டி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய லூக்காஸை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!