News February 17, 2025

தடைகளை நீக்கும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர்

image

நங்கநல்லூர் அஞ்சனேயர் கோவில் 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 32 அடி உயர ஹனுமான் சிலை அமைக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இராம நவமி,ஆஞ்சநேய ஜெயந்தி உள்ளிட்ட நாட்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது, கடன்,நோய்,பகை தீர பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர், இந்த கோவில் சென்னை நகரின் முக்கிய ஆன்மிகத் தலமாக திகழ்கிறது. Share it

Similar News

News November 23, 2025

மெரினா கடற்கரையில் இன்று கலாச்சார கலைவிழா

image

சென்னை, மெரினா கடற்கரையின் நீலக் கொடி பகுதியில் இன்று மாலை 5:30 மணிக்கு கலாச்சார கலைவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் நம் பாரம்பரியத்தை கொண்டாடும் இந்த நிகழ்வில் பெரிய மேளம், சேவையாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட கலைகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழர் மரபை அனுபவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

ரு.2,036 கோடியில் 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர்

image

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), முதற்கட்ட வழித்தட திட்டத்திற்காக தோராயமாக ரூ.2,036 கோடி மதிப்பில் 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலும் 6 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இந்தப் புதிய ரயில்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். இது சென்னையின் விரிவடையும் மெட்ரோ சேவைக்கு உறுதுணையாக இருக்கும்.

News November 23, 2025

சென்னை மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

image

சென்னை மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <>க்ளிக் <<>>செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!