News January 24, 2025
தடுப்பூசி செலுத்திய 3 மாத குழந்தை உயிரிழப்பு

சத்தி கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் கவுதமின் மனைவி அசின் (19). இவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் இன்று குழந்தையை அசின் வெள்ளியம்பாளையம்புதூர் அங்கன்வாடி மையத்துக்கு அழைத்து சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த குழந்தையை ஜிஎச்க்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 6, 2025
பெருந்துறை: 18 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை அதிரடி தீர்ப்பு!

பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக வெளிநாட்டினா் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை காவல் ஆய்வாளா் தெய்வராணி தலைமையிலான போலீஸாா் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி அங்கு சென்று விசாரணை நடத்தினா். அதில் சட்ட விரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 18 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
News December 6, 2025
ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்ட காவல்துறை, நேற்று (05/12/2025) இரவு நேர சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு பணிக்காக ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கு அவசர உதவி தேவையானால், பொது அவசர எண் 100, சைபர் கிரைம் உதவி 1930, குழந்தைகள் உதவி 1098 ஆகிய எண்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.