News December 5, 2024
தஞ்சை: 15க்குள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம் சார்பில் மன்ற செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடும் போட்டிகள் வரும் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு பெரிய கோயில் நடராஜர் சன்னதியில் நடக்கிறது. இதில், 3 ஆம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 3 நிலையாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கு வரும் 15க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 5, 2025
தஞ்சை: 300 கிலோ போதை பொருள் கடத்தல்

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்குகிடமாக வாகனங்களை சோதனை செய்ததில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்தி வந்த கும்பகோணம், புளியம்போட்டையைச் சேர்ந்த சதீஷ் குமார், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விம்பாராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்த 296 கிலோ குட்கா போதைப்பொருட்கள், 2 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
News November 5, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று (நவ.5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 4, 2025
தஞ்சாவூர்: வெளுத்து வாங்கப்போகும் மழை!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (நவ.05) மற்றும் நவ.06ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!


