News January 2, 2025
தஞ்சை வந்த 2500 டன் அரிசி

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கடைகளின் மூலம் பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்பு திட்டத்தின் கீழ் சர்க்கரை ,கரும்பு ,பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். அந்த வகையில், டெல்டா மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு வழங்குவதற்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 2,500 டன் பச்சரிசி சரக்கு ரயில் மூலம் தஞ்சைக்கு வந்தது.
Similar News
News December 6, 2025
தஞ்சை: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6.கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 6, 2025
தஞ்சை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

டிட்வா புயலால் சேதம் அடைந்த வயல்களில் விவசாயிகள் சாகுபடி செய்த பயிா்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும். மழைக்காலங்களில் உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்
News December 6, 2025
தஞ்சை: தீக்கிரையான 4 கடைகள்

அம்மாபேட்டை அருகே பூண்டி மெயின் ரோடு, கடைவீதியில் முகம்மது இஸ்மாயில் என்பவர் நடத்திவரும் பேன்ஸி ஸ்டோர் கடையில் இரவு மின் கசிவால் திடீரென தீப்பிடித்தது. இந்தத் தீ அருகிலிருந்த விஜயகுமாரின் பஞ்சர் கடை, ரவியின் ஏஜென்சி மற்றும் சக்திவேலின் எர்த் மூவர்ஸ் உள்ளிட்ட கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


