News April 7, 2025
தஞ்சை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.7) காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவெடுத்தது. இதன் காரணமாக நாளை (ஏப்.8) திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை SHARE பண்ணுங்க
Similar News
News April 9, 2025
அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-2025-ம் ஆண்டு 24-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (புதிய பாடத்திட்டத்தின்படி) தொடங்கப்பட உள்ளது. இதற்கு www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மூலம் விண்ணப்பிக்கலாம். இணைய வழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News April 8, 2025
சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியர்

தஞ்சாவூர் அருகே கரந்தையை சேர்ந்த கணேசன் (65), தெருவில் விளையாடிய, 10 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் நடந்ததை கூற அதிச்சியடைந்த பெற்றோர்கள் தஞ்சாவூர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து கணேசனை போக்சோ சட்டத்தின் கீழ், நேற்று போலீசார் கைது செய்தனர்.
News April 8, 2025
உலகம் வியக்கும் தஞ்சாவூர் பொருட்கள்

தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற 62 பொருட்களில், 10 பொருட்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவையாகும் அவை: 1. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை 2. தஞ்சாவூர் ஓவியம் 3. சுவாமிமலை வெங்கல சிலை 4. நாச்சியார்கோவில் விளக்கு 5. தஞ்சாவூர் வீணை 6. தஞ்சாவூர் கலைத்தட்டு 7. கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் 8. தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு 9. கும்பகோணம் வெற்றிலை 10. நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் ஆகியவை ஆகும். ஷேர் பண்ணுங்க