News April 10, 2025
தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04362-230121, மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077, விபத்து அவசர வாகன உதவி – 102, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் – 18004250111, காவல் கண்காணிப்பாளர் – 04362-277110. பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.
Similar News
News November 16, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்றும் (நவ.16), நாளையும் (நவ.17) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 16, 2025
தஞ்சை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 16, 2025
தஞ்சையில் கொள்முதல் நிலையங்கள் இன்று செயல்படும்!

தஞ்சாவூர் மாவட்டத்தில், செயல்பாட்டிலுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை செயல்படும். (நவ.16) முதல் (நவ.20) வரை பலத்த மழை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி தஞ்சாவூரில் 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 9 தொகுப்பு கிடங்குகள், 14 சேமிப்பு கிடங்குகள் ஆகியவை இன்று (நவ.16) செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


