News March 20, 2024

தஞ்சை திமுக வேட்பாளர் இவர்தான்!

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக முரசொலி அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Similar News

News November 19, 2025

தஞ்சை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News November 19, 2025

தஞ்சை: பணிச்சுமை காரணமாக தற்கொலை முயற்சி

image

சார் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அதிகமான பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள், நேற்று கும்பகோணம் மாநகராட்சி பகுதியில், அங்கன்வாடி ஊழியர் சித்ரா என்ற பெண் S.I.R பணியில் வேலைப்பளு காரணமாக அதிக மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார், அவரை உறவினர்கள் மீட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

News November 19, 2025

தஞ்சை: மீண்டும் மழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!