News October 10, 2025
தஞ்சை: தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

திருவையாறு அடுத்த மேலஉத்தமநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த செல்வம் (50) என்பவருடைய மகன் ரகுநாதன் (19) வாழை இலை அறுக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மதுபோதையில் வீட்டில் ரகுநாதன் தகராறு செய்துள்ளார். அப்போது செல்வம் கண்டித்ததால், ரகுநாதன் அரிவாளால் அவரை வெட்டியுள்ளார். செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். திருவையாறு போலீசார் வழக்கு பதிந்து ரகுநாதனை கைது செய்துள்ளனர்.
Similar News
News December 8, 2025
தஞ்சை: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி!

கும்பகோணம் அருகே கடந்த 30-ந் தேதி இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயத்துடன் சாலையோரத்தில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News December 8, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (டிச.07) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.